Skip to main content

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின் (படங்கள்)

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 -ஆவது பிறந்தநாளும் 58வது குருபூஜை தினமுமான இன்று, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.கவின் தலைவருமான மு.க.ஸ்டாலின், மதுரை - கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

 

பின் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர்கள் மருது பாண்டியர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்