தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்திருந்தார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்த நிலையில், இது தொடர்பாக இன்று முடிவெடுக்கப்படும் என நேற்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்நிலையில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் சுற்றறிக்கை விடுத்துள்ளார். அதில், பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து நடைமுறை, தனித்தேர்வர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும். அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களை திறக்கக்கூடாது. வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவலர்களை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.