Published on 12/07/2019 | Edited on 12/07/2019
திரைப்பட இயக்குனர் பா.இரஞ்சித்தின் தந்தை M.பாண்டுரங்கன் (வயது 63) இன்று அதிகாலை 2 மணி அளவில் இயற்கை எய்தினார்.
இன்று மாலை 5மணி அளவில் அவரது சொந்த ஊரான கர்லப்பாக்கத்தில் இறுதி ஊர்வலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நிலையில் சரியில்லாத காரணத்தால் சென்னை அப்போலோவில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அதிகாலை 2 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.