துணைமுதல்வர் ஒபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனியில் நடந்த அரசு விழாவில் ஒபிஎஸ் கலந்து கொண்ட திமுக எம்எல்ஏகளுக்கு தடபுடல் உபசரிப்பு செய்தார்.
கடந்த மாதம் நடந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் தொகுதியை திமுக தக்கவைத்து கொண்டது. அதன் அடிப்படையில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினராக மகாராஜனும்,பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் சரவணக்குமாரும் வெற்றி பெற்றனர்.
இந்தநிலையில்தான் நேற்று தேனியில் உள்ள மின்வாரிய குறைதீர்மைய துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் துணை முதல்வர் ஒபிஎஸ் கலந்து கொண்டார். அதற்குமுன்பே ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனும்,பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமாரும் கலந்து கொண்ட விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஒபிஎஸ்சை வரவேற்றனர்.
அதை கண்டு ஒபிஎஸ்சும் திமுக எம்எல்ஏகளுக்கு இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார். அதன்பின் திமுக எம்எல்ஏக்களையும் உடன் அழைத்தவாரே மின்வாரிய குறைதீர்மையத்தை திறந்து வைத்தார். அதன்பிறகு திமுக எம்எல்ஏக்களுக்கு சால்வை அணிவிக்க அதிகாரிகளுக்கு ஒபிஎஸ் உத்திரவுயிட்டதின் பேரில் அதிகாரிகளும் சால்வை அணிவித்தனர். அதன் பிறகு ஒபிஎஸ்சே திமுக எம்எல்ஏக்களை அழைத்து மரக்கன்றுகளையும் நடவைத்தார். அந்த அளவிற்கு திமுக எம்எல்ஏக்களுக்கு ஒபிஎஸ் உபசரிப்பு செய்ததை கண்ட பார்வையாளர்கள் மற்றும் கட்சிகாரர்கள் அசந்து போய் விட்டனர்.
அதுமட்டு மல்லாமல் விழாவில் திமுக எம்எல்ஏக்களுடன் எந்த ஒரு கருத்து வேறுபாடு இல்லாமல் ஒபிஎஸ் சகஜமாக பேசினார். இந்த விழாவில் கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் மற்றும் மாவட்ட கலெக்டர் பல்லவி பலதேவ் உள்பட அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டனர்.