
உத்தரப் பிரதேசம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்கள் சந்திரசேகர் - இந்திராவதி தம்பதியினர். இருவரும் 50 வயதை கடந்துவிட்டனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். சந்திரசேகர் வேலைக்காக அடிக்கடி வெளியூர் சென்று வந்திருக்கிறார். அப்போது, இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆசாத்(30) என்ற இளைஞருடன் இந்திராவதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. அதே சமயம் இந்திராவதிக்கு ஆசாத் உறவு முறைப்படி பேரன் என்பதால், அக்கம்பக்கத்தின் தொடக்கத்தில் இவர்களின் பழக்கத்தை கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திராவதி - ஆசாத்தின் திருமணத்தை மீறிய பழக்கம் சந்திரசேகருக்குத் தெரியவந்துள்ளது. இதனையறிந்து அதிர்ச்சியடைந்த சந்திரசேகர் இருவரையும் அழைத்து கடுமையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து சந்திரசேகர் போலீஸில் புகார் அளித்தபோது, இருவரும் வயதில் பெரியவர்கள் என்றும், அவர்களது இணையை அவரவர் முடிவு செய்யும் உரிமை அவரவருக்கு உள்ளது என்று கூறி வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியேறிய இந்திராவதி ஆண் நண்பர் ஆசாத்தை திருமணம் செய்துகொண்டார். இருவரும் இந்து முறைப்படி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனிடையே ஆசாத்தை கரம் பிடிப்பதற்கு தடையாக இருக்கும் சந்திரசேகர் மற்றும் அவரது குடும்பத்தினரை விஷம் வைத்து கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டி இருந்ததும் தற்போது தெரியவந்திருக்கிறது.
கணவர் மற்றும் 4 பிள்ளைகளை விட்டுவிட்டு 50 வயது பெண் 30 வயது பேரனை திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.