Skip to main content

30 ஆண்டுகளுக்கு முன்பே வைக்கப்பட்ட கோரிக்கை... கூட்டத்தொடர் அறிவிப்பை எதிர்நோக்கி பொதுமக்கள்!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

30 years ago, the demand put forward ... the public in anticipation of the announcement of the meeting

 

தமிழ்நாட்டில் சிலைகளால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக கருதி கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தலைவர்கள் சிலைகளுக்கு இரும்பு கம்பியால் கூண்டு அமைக்கப்பட்டது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் அதே நடைமுறையில்தான் இன்றும் உள்ளது. மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டுக்காகவும், மொழிக்காகவும் பாடுபட்ட தலைவர்களுக்குப் புதியதாக சிலை வைக்கும் நடைமுறை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் செப். 7ஆம் தேதி நடைபெற்ற செய்தித்துறை மானியக் கோரிக்கையில் நாட்டின் சமூகநீதிக்காக போராடியவர்கள், திராவிட இயக்க முன்னோடிகள், விடுதலைக்காகப் போராடிய தியாகிகள், மொழிப்போர் தியாகிகள், தலைசிறந்த இலக்கியப் படைப்பாளிகள், ஆகியோரைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், விடுதலை போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளுக்கு கடலூரிலும், பெண் சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தத்திற்கு மயிலாடுதுறையிலும், முத்துலட்மி அம்மையாருக்கு புதுக்கோட்டையிலும், ராணிபேட்டையில் தமிழறிஞர் வரதராசனார் உள்ளிட்ட 11 பேருக்கு சிலைகள் நிறுவப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது 14 கிலோமீட்டர் நீளமுள்ள உலகிலேயே மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஏரியான வீரநாரயணன் (வீராணம்) ஏரி. சாதாரணமாக செய்யப்பட்ட கருவிகளைக் கொண்டு வீராணம் ஏரி கி.மு 907 - 955 ஆண்டு முதலாம்  சோழா்கள் காலத்தில் 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஏரியின் கட்டுமானப் பணியில் பழங்குடியினரே முழுவதும் ஈடுபட்டு கட்டியுள்ளனர். இந்த ஏரியைக் கட்டிய பெருமை அவர்களையே சாறும் என்றும் கூறப்படுகிறது. ராஜாதித்ய சோழனால் உருவாக்கப்பட்டது. பின்னர் அவர் தனது தந்தை பராந்தக சோழன் பெயரைப் சூட்டிக்கொண்டார். இந்த ஏரி தஞ்சை மாவட்டம்  கீழணையில் இருந்து வடவார் வாய்காலின் வழியாக தண்ணீரை பெற்று, வீராணம் ஏரியில் சேமிக்கப்பட்டு, பாசனத்திற்கும் சென்னையின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஏரியின் முழுகொள்ளவு 47.50 அடியாகும்.

 

30 years ago, the demand put forward ... the public in anticipation of the announcement of the meeting

 

இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி வட்டத்திற்கு உட்பட்ட டெல்டா பகுதியான 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்த ஏரி விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயிகள் மற்றும் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு பராந்தக சோழன் கட்டியுள்ளார். இப்படி பெருமை மிக்க ஏரியைக் கட்டிய அவருக்கு வீராணம் ஏரியில் சிலை வைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறார்கள். கடந்த மாதம் வீராணம் ஏரியில் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோரை கடலூர் மாவட்ட இயற்கை வேளாண் பெண் விவசாயியும், வீராணம் ஏரியின் ராதா வாய்கால் பாசன சங்கத் தலைவருமான ராதாவாய்கால் ரங்கநாயகி சந்தித்து கோரிக்கை விடுத்தார்.  இதேபோல் மாவட்டத்தில் உள்ள முன்னோடி விவசாயிகள் வீராணம் ஏரியைக் கட்டிய பராந்தக சோழனுக்கு மணிமண்டபத்துடன் கூடிய சிலை வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பொதுப்பணித்துறையினருக்கு மனு அளித்துவருகிறார்கள்.

 

மேலும், தற்போதைய காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் வீராணம் ஏரியை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என்றும் பேசியுள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தற்போதைய வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தந்தை கிருஷ்ணமூர்த்தி சட்டமன்றத்தில் பேசியுள்ளார். எனவே தமிழ்நாடு அரசு வீராணம் ஏரியை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக மாற்றி, வீராணம் ஏரியைக் கட்டிய பரந்தக சோழனுக்கு மணிமண்டபத்துடன் கூடிய சிலையை வைக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தொடரிலே அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்