Published on 12/04/2021 | Edited on 12/04/2021

கரோனா பரவலின் இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி இன்று (12.04.2021) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு ஆகியவற்றைக் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசின் முடிவு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.