தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி அன்று 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புத்தகப்பை இல்லாத நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்திருந்தது. மேலும், அந்த குறிப்பிட்ட நாளன்று மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு ரூபாய் 1.2 கோடியை ஒதுக்கீடு செய்திருந்தது. இந்த நாளில் மாணவர்களுக்கு வாழ்க்கை கல்விக் குறித்து பயிற்றுவிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.
அதேபோல் மாடித் தோட்டம் அமைப்பது, மூலிகைத் தாவர வளர்ப்பு, பாரம்பரிய கலைகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் திடீர் திருப்பமாக பிப்ரவரி 26ம் தேதி புத்தகப்பை இல்லா தினம் கடைபிடிக்கப்படும் என்ற பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.