Skip to main content

'இன்ஸ்டாவில் காதல் செய்த மகள்...'- முட்டை பொரியலில் விஷம் வைத்த தாய்

Published on 02/02/2025 | Edited on 02/02/2025

 

nn

கள்ளக்குறிச்சியில் தாயே தன்னுடைய மகளுக்கு முட்டை பொரியலில் எலி பேஸ்ட் கலந்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. இவருடைய மகள் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். சமூக வலைத்தளத்தில் தீவிரமாக இயங்கி வந்த அவருடைய பெண் இன்ஸ்டால் பக்கத்தின் மூலம் அறிமுகமான இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த தாய் மல்லிகா தன்னுடைய மகளை பலமுறை கண்டித்து வந்துள்ளார். ஆனால் மகள் கேட்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த அவர் முட்டை பொரியலில் எலி பேஸ்ட்டை கலந்து அவருக்கு கொடுத்துள்ளார்.

அதனை சாப்பிட்ட அவருடைய மகள் வாயில் நுரை தள்ளியது. உடனடியாக அங்கு வந்த உறவினர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில் கள்ளக்குறிச்சி வடபொன்பரப்பி காவல் நிலைய போலீசார் தாய் மல்லிகா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்