சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் காவல் நிலையம் பின்புறம் உள்ள வடிகால் வாய்க்காலில் தற்போது வெள்ளநீர் அதிகமாகச் செல்கிறது. இந்த நிலையில், அண்ணாமலை நகர் பேரூராட்சிக்குட்பட்ட ஆமை பள்ளம், கலுங்குமேடு, கே.ஆர்.எம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வெள்ளநீர் குடியிருப்புகளில் சூழ்ந்துள்ளது.
வெள்ள நீரில் அடித்துவரப்பட்ட பெரிய முதலை ஒன்று வாய்க்காலின் கரையில் படுத்திருந்துள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்து, பயத்தில் கூச்சலிட்டுள்ளனர். பொதுமக்களைப் பார்த்த முதலை வாய்க்கால் தண்ணீரில் இறங்கிச் சென்றுள்ளது. முதலை, குடியிருப்பு பகுதியில் உள்ள வெள்ளநீரில் சென்றுள்ளதா? இல்லை வாய்க்காலில் சென்றுள்ளதா? என்று தெரியாமல் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியில் உள்ளனர். வெள்ள நீரில் உள்ள முதலைகளை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.