Skip to main content

தென்காசி சட்டமன்றத் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

Counting of Tenkasi Assembly Constituency re-voting has begun

 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழனி நாடார் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் என்பவர் போட்டியிட்டார். இந்நிலையில் பழனி நாடார், செல்வமோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

 

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்வமோகன்தாஸ் பாண்டியன், வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் நடந்ததுள்ளது. எனவே பதிவான வாக்குகளை மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ண உத்தரவிட்டு இருந்தது.

 

இந்நிலையில் தென்காசி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு மறு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் அலுவலராக தென்காசி உதவி ஆட்சியர் லாவண்யா நியமிக்கப்பட்டுள்ளார். காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்ற நிலையில் 20 நிமிடம் தாமதமாகக் காலை 10.20 மணிக்கு தொடங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிட்டார்.  இந்த மறு வாக்கு எண்ணிக்கையில் 2589 தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. மதியம் 12.30 மணியளவில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுவாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தெருநாய்கள் கடித்து சிறுமி படுகாயம்!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Tenkasi District Achanputur 12th Street dog incident
மாதிரிப்படம்

தெருநாய்கள் கடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் 12வது தெருவில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு எட்டு வயதில் மனிஷா என்ற மகள் உள்ளார். இந்தச் சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று (22.06.2024) காலை 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்ததில் சிறுமி மனிஷாவைக் கடித்துள்ளன.

இதனைக் கண்ட சிறுமியின் உறவினர் ஒருவர் சிறுமியை மீட்டுள்ளார். இருப்பினும் நாய் கடித்ததில் படுகாயமடைந்த மனிஷா தென்காசி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இப்பகுதியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். 

Next Story

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி! 

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
tourist Allowed to bath in Courtallam waterfalls 

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாகக் கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இத்தகைய சூழலில் தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் கடந்த 17 ஆம் தேதி (17.05.2024) திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் (வயது 17) தனது குடும்பத்தாருடன் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், அந்தச் சிறுவன் அடித்துச் செல்லப்பட்டார். மேலும், அவர் உட்பட 5 பேர் அந்த வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டனர். அதில், 4 பேரை அங்கிருந்தவர்கள் நல்வாய்ப்பாக மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், போலீசார் ஆகியோர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான சிறுவன் அஷ்வினைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில், அருவியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிறுவன் அஸ்வின் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. உயிரிழந்த சிறுவன் அஸ்வின், நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி உயிர்நீத்த வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகள், அணை பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் குளிக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டிருந்தார். இதனால் குற்றாலம் அருவிகளில் கடந்த 7 நாட்களாகக் கனமழை காரணமாக குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குற்றாலம் பழைய அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று (24.04.2024) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று ஐந்தருவி பகுதியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதான அருவியில் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.