போலி பட்டா குறித்து அதிகாரிகள் மீது புகார் வந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து இடைநீக்கம் செய்யவேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமென்று தலைமை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதுத்தொடர்பாக வந்த மனுக்களை விசாரித்த நீதிபதி மகாதேவன், போலி பட்டாக்கள் குறித்துவந்த புகார்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து ஜூலை 3ம் தேதிக்குள் அதிகாரிகள் தாக்கல் செய்யவேண்டுமென்று கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளார்.