காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவரர் கராத்தே தியாகராஜன், அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
கராத்தி தியாகராஜன் தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. சமீபத்தில் நடந்த கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் போட்டியிடவேண்டும். தென் சென்னையிலாவது தனித்து போட்டியிட வேண்டும். தென் சென்னையில் நான் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்று காட்டுகிறேன் என்றார். இது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.