நான்காண்டுகால மக்கள் விரோத மோடி அரசைக் கண்டித்தும், மத்திய அரசின் அடிமையைப் போலச் செயல்படும் தமிழக எடப்பாடி அரசையும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தையும் கண்டித்து தமிழக மக்கள் மேடை சார்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளர், விவசாயிகள், விவசயாத் தொழிலாளர், வாலிபர்கள், மாணவர்கள், பெண்கள், மத்தியதர ஊழியர்கள் உள்ளிட்டோரை உள்ளடக்கிய மக்கள் மேடை அமைப்பு நான்கு ஆண்டுகால மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்தி நாடுமுழுவதும் புதன்கிழமையன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டிக்கும் கோரிக்கையையும் இணைத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மக்கள் மேடை அமைப்பின் நிர்வாகிகள் எம்.சின்னத்துரை, எஸ்.கவிவர்மன், எஸ்.சங்கர், எஸ்.பொன்னுச்சாமி, எம்.உடையப்பன், ஏ.ராமையன், சி.அன்புமணவாளன், கே.முகமதலிஜின்னா, வி.சிங்கமுத்து, எஸ்.சி.சோமையா, ஏ.எல்.ராசு, துரை.நாராயணன், முருகானந்தம், எஸ்.விக்கி, நியாஸ் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் அரும்புகள் கலைக்குழுவினரின் தப்பாட்டம் நடைபெற்றது.