Published on 19/07/2020 | Edited on 19/07/2020
![mks](http://image.nakkheeran.in/cdn/farfuture/zx-OgGwNe4xmG5Tzn3aPhfzIO7168e2nyjEO5m7PUD8/1595157373/sites/default/files/inline-images/555_8.jpg)
கோவையில் மூன்று கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கூறியதாவது:- கோவையில் நேற்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சினைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பாதவண்ணம், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.