Published on 03/08/2021 | Edited on 03/08/2021
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவின்பேரில், சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது. ஆனால், தடையை மீறி வெளியூரிலிருந்து வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பக்தர்களைக் கோவிலுக்குள் அனுமதித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோவில் இணை ஆணையர் கல்யாணி, சம்பந்தப்பட்ட தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி, கோவிலில் வேலை பார்த்த காவலாளிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.