Skip to main content

“நெட் தேர்வுகள் நடத்தும் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்” - முதல்வர்  வலியுறுத்தல்!

Published on 07/01/2025 | Edited on 07/01/2025
CM insists scheme of conducting NET exams should be modified 

தமிழகத்தில் தைப்பொங்கல் கொண்டாடும் ஜனவரி 14 உட்பட்ட நாட்களில் தேசிய தேர்வு முகமையால் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள யு.ஜி.சி. நெட் தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றியமைக்கக் கோரிக்கை விடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர்  எழுதியுள்ள கடிதத்தில், “இந்த ஆண்டு தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்டிகை ஆகும். தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினராலும் அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

முன்னதாக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கடந்த 23 ஆம் தேதி (23.12.2024) மத்திய கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பண்டிகை ஜனவரி 13 முதல் ஜனவரி 16 வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை அனைத்து தமிழ்ச் சமூகத்தினரும் நான்கு நாட்கள் உற்சாகமாகக் கொண்டாடுவர். எனவே, இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2025 ஜனவரி 14 முதல் 17 வரை அரசு விடுமுறை நாட்களாகத் தமிழ்நாடு அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படும் பொங்கல், ஒரு பண்டிகையாக மட்டுமல்லாது ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காட்டுவதாகவும், இந்தப் பொங்கல் பண்டிகையைப் போலவே, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. ஆகவே, திட்டமிட்டபடி பொங்கல் விடுமுறையில் யுஜிசி-நெட் தேர்வை நடத்தினால், ஏராளமான தேர்வர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

இதே காரணத்திற்காக ஜனவரி 2025இல் நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர்கள் தேர்வு ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே, யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை வேறொரு பொருத்தமான நாட்களில் மாற்றியமைக்கத் தேவை உள்ளது என்று தாம் கருதுகிறேன். அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் தேர்வுகளுக்கு எளிதில் வர இயலும் என்றும் முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பண்டிகை காலங்களில் தேசிய தேர்வு முகமை யுஜிசி-நெட் தேர்வை நடத்தவில்லை என்று தரவுகள் காட்டுகிறது. ஆகவே, இத்தகைய சூழ்நிலையில், யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை ஜனவரி 13 முதல் 16 வரையிலான நாட்களில் நடத்துவதைத் தவிர்த்து பொருத்தமான வேறு நாட்களுக்கு மாற்றியமைக்குமாறும் மத்திய கல்வி அமைச்சர் தலையிட்டு தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் காலங்களில் யுஜிசி-நெட் தேர்வுகள் நடத்தும் திட்டத்தை மாற்றியமைக்க வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்