Skip to main content

முதல்வர் வருகை... இன்னும் சற்று நேரத்தில் 'தமிழக இ-பட்ஜெட்'

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

Chief Minister's visit ... 'Tamil Nadu e-budget' in a while

 

இன்னும் சற்று நேரத்தில் தமிழகத்தின் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 

 

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் நிதிநிலையைத் தாக்கல் செய்கிறார். தாக்கலாகும் இ-பட்ஜெட்டை கணினித் திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெறும். தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட், வேளாண்  பட்ஜெட் மீதான விவாதம் 16ஆம் தேதி தொடங்குகிறது. 19ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் பட்ஜெட் மீதான விவாதத்தில் கடைசி நாளில் பதிலுரை அளிக்கப்பட இருக்கிறது. அதேபோல் தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்குகிறது. காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு செப்டம்பர் 20 ஆம் தேதி முதல்வர் பதிலளிக்க இருக்கிறார்.

 

Chief Minister's visit ... 'Tamil Nadu e-budget' in a while

 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் அதுவும்  முதல் இ-பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. இன்றைய பட்ஜெட்டில் தேர்தலின் போது திமுக சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. இதற்கு முன்பே தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தமிழக பட்ஜெட் தாக்கலுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கிற்கு வருகைபுரிந்துள்ளார். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் கலைவாணர் அரங்கத்திற்கு வருகை புரிந்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்