Skip to main content

கட்டுக்குள் வராத சென்னை: ரோபோக்களை களமிறக்கும் காவல்துறை!! 

Published on 30/04/2020 | Edited on 30/04/2020
 Chennai; Police to field robots !!

 

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை மொத்தமாக 906 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை சாதாரணமாக உள்ள நிலையில், சென்னையில் கட்டுக்குள் வராத நிலையை அடைந்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவலை தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் சென்னையில் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணிக்காக ரோபோ அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ரோபோ தாட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் சென்னை காவல்துறை இந்த கண்காணிப்பு முறையை ஏற்படுத்த உள்ளது. பொதுமக்களுடன் உரையாடி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக மயிலாப்பூரில் தனிமைப்படுத்தப்பட்ட மீனாம்பாள்புரம் பகுதியில் ரோபோ மூலம் இந்த கண்காணிப்பு நடவடிக்கை முதலில் கொண்டு வரப்படயிருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்