
கன்னியாகுமரியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ-பைக் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சுனில்குமார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுனில் இ-பைக் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இன்று வழக்கம்போல தேவாலயத்திற்கு சென்ற சுனில் குமார் பின்னர் வீட்டின் கீழ் தளத்தில் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்பொழுது திடீரென பைக்கின் பேட்டரி வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்தது. இதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் மற்றும் வீட்டில் ஜன்னல், கதவு ஆகியவை எரிந்து சேதமாகின.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்த பொழுது பேட்டரி வெடித்து சிதறி எரிந்த அந்த காட்சிகள் இருந்தது. இந்த சம்பவத்தின் போது வீட்டின் வெளியே யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் எந்த ஒரு காயமும் இல்லாமல் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.