சிலை கடத்தலில் வேணு சீனிவாசனுக்கு தொடர்பு என்பது ஏற்புடையதாக இருக்காது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக, ரங்கராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே, ஸ்ரீரங்கம் கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த டிவிஎஸ் குழுமத்தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணையில், டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசனை 6 வாரத்திற்கு கைது செய்ய தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்,
சிலை கடத்தலில் வேணு சீனிவாசனுக்கு தொடர்பு என்பது ஏற்புடையதாக இருக்காது. தனிப்பட்ட முறையில் என்னால் நம்பமுடியவில்லை என அவர் கூறியுள்ளார்.