மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் வருகின்ற மே மாதம் 6-ஆம் தேதி நடக்கவிருக்கின்ற சூழ்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் வெளி மாநிலங்களில் நியமிக்கப்பட்டிருப்பதை நீக்க வேண்டும் மற்றும் தமிழக மாணவர்கள் தமிழகத்திலுள்ள தேர்வு மையங்களில் தேர்வெழுத அதிகாரிகளுக்கு சிபிஎஸ்சி உத்திரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்களின் நீட் தேர்விற்கான மையங்கள் கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவர், மேலும் மாணவர்கள் இருக்கும் இடத்திலிருந்து சராசரியாக 500 கிலோமீட்டர் தூரத்தில் இந்த வெளிமாநில தேர்வு மையங்கள் இருப்பதால் மாணவர்களுக்கு பெரும் அலைச்சல் ஏற்படும் எனவே தமிழக மாணவர்கள் தமிழகத்தில் தேர்வெழுதும் வகையில் தேர்வு மையங்கள் மாற்றப்படவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே சிபிஎஸ்சி தரப்பு இந்த தேர்வு மைய ஒதுக்கீடு கணினி மூலம் செய்லபடுத்தப்பட்ட ஒன்று, எனவே அதை மாற்ற முடியாது என விளக்கமளித்த நிலையில் இந்த வழக்கானது விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.