Skip to main content

கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் அரசாணையை நடைமுறைப்படுத்த கோரி வழக்கு

Published on 06/03/2018 | Edited on 06/03/2018
court

 

கரூர் தோரணக்கால்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். 

 

அந்த மனுவில் "கரூர் நகராட்சிக்கென புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான அரசாணை எண் 87ஐ நடைமுறை படுத்தக்கோரி கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தேன். அதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, கடந்த  2017 பிப்ரவரி 28ல் இரண்டு மாதங்களுக்குள்ளாக கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து மீண்டும் மாநகராட்சி ஆணையருக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ஹர்மநதர் சிங், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் பிரகாஷ், கருர் நகராட்சி ஆணையர் அசோக் குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதோடு, கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார். 

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, இது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ஹர்மந்தர் சிங்,  தற்போதைய நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

சார்ந்த செய்திகள்