Published on 16/05/2025 | Edited on 16/05/2025

சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளுக்கு செல்போன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சட்டவிரோதமாக தடையை மீறி உள்ளே கொண்டு செல்வது என்பது அவ்வப்போது நிகழும் ஒன்று. அப்படியான சில முறைகேடுகள் போலீசார் சோதனையில் சிக்கும். அப்படி சேலம் சிறையில் தர்மபுரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் நூதனமான முறையில் கஞ்சாவை எடுத்துச் சென்றது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் பிஸ்கட் பாக்கெட்டுக்குள் உள்ளே அடுக்கி வைக்கப்பட் பிஸ்கட்டுகளுக்கு நடுவே வட்டமாக துளையிட்டு அதன் நடுவில் கஞ்சாவை பாக்கெட்டுகளை அடைத்து எடுத்துச் சென்ற நிலையில் சந்தேகமடைந்த போலீசார், பிஸ்கட் பாக்கெட்டை உடைத்து சோதனை செய்து பொழுது கஞ்சா சிக்கியது தொடர்பான வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.