Published on 12/12/2021 | Edited on 12/12/2021
![Fourth marriage for not having a child ... Bus driver arrested for making girl pregnant!](http://image.nakkheeran.in/cdn/farfuture/oaZqupntg1WmmKN2YV2XkDxadyrz8DPFVN8Vkq0Nul4/1639287401/sites/default/files/inline-images/zzzzzw44.jpg)
அரியலூரில் குழந்தை இல்லை என்பதற்காக 3 திருமணத்திற்கு பின்பு நான்காவதாக சிறுமியை திருமணம் செய்து கொண்ட அரசு பேருந்து நடத்துனரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் ஆன நிலையில் குழந்தை இல்லை என்பதற்காக நான்காவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். நான்காவதாக சிறுமியை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் கர்ப்பமாகியுள்ளார். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அரசு பேருந்து ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் மற்றும் 13 வயது சிறுமியைத் திருமணம் செய்து வைத்த அவருடைய தாயார் பரமேஸ்வரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.