Published on 26/07/2018 | Edited on 26/07/2018
பொதுத்துறையான தொலைத்தொடர்பு பி.எஸ்.என்.எல்.லில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று இந்தியா முழுக்க உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு 3வது புதிய சம்பள உயர்வு தரவேண்டும். பி.எஸ்.என்.எல்.க்கு 4G சேவை வேண்டும் ஒய்வூதியதாரர் ஊதிய ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய மோடி அரசை கண்டிப்பதாகவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். ஈரோட்டில் நடந்த இவர்கள் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் AITUC தொழிற்சங்க மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆறுமுகம் துவக்கி வைத்து மத்திய பா.ஜ.க. அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து பேசினார்.