ஒடிசா மாநிலம் வித்யார்பூர் கிராமத்தை சேர்ந்த ஜோதிராஜன் தாஸ் என்பவர், பக்கத்துக் கிராமமான ஆனந்த்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இளம்பெண்ணும் ஜோதிராஜன் தாஸை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜோதிராஜன் தாஸ் அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால், திருமணத்திற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
இருப்பினும் தொடர்ந்து வற்புறுத்தி வந்த ஜோதிராஜன் தாஸ் திருமணம் செய்யச் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், தனிமையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த பெண் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த ஜோதிராஜன் தாஸ், காதலியின் வீட்டிற்கு சென்று கத்தி கூச்சலிட்டுள்ளார். பின்பு மீண்டும் தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கும் மாறு வற்புறுத்திள்ளார். ஆனால் தொடர்ந்து இளம்பெண் மறுத்ததால், பெண்ணின் வீட்டிற்கு தீ வைத்துள்ளார். சிறிது நேரத்தில் தீ வீடு முழுவதும் பரவி வீட்டில் இருந்த பொருட்களை அனைத்தும் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய ஜோதிராஜன் தாஸை தேடி வருகின்றனர்.