Skip to main content

பள்ளிகள்தோறும் போனஸ் வேட்டை! -கல்வித்துறையினர் மீது புகார்!

Published on 28/10/2019 | Edited on 28/10/2019

 

“விஜயகாந்த் மேடையில பேசுவாரு.. எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமான்னு.. அதையேதான் நாங்களும் சொல்லுறோம்..” -எடுத்த எடுப்பிலேயே இப்படி பேசினார்கள்  விருதுநகர் மாவட்டம் – வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். 

 

‘என்ன நடந்துச்சு?’ அவர்களிடம் கேட்டோம். “சார்.. கல்வித்துறைன்னா சுத்தமா இருக்கணும்ல. ரொம்ப அசுத்தமா இருக்கு. இந்த டிபார்ட்மென்ட்ல ஓ.ஏ., டிரைவர்ல இருந்து அதிகாரிகள் வரைக்கும் யாருக்கும் சம்பளம் குறைச்சலா இல்ல. ஆனா.. பாருங்க.. தீபாவளி போனஸ் கேட்டு, ஒ.ஏ.க்களும் டிரைவர்களும்  கையில நோட்டோட ஸ்கூலு ஸ்கூலா ஏறி இறங்கிட்டாங்க. தனியார் பள்ளிகளில் மட்டுமா? இப்பல்லாம் அரசுப் பள்ளிகளிலும் வசூல் வேட்டைதான். கவர்மென்ட் ஸ்கூல் ஒவ்வொண்ணுலயும் ரெண்டாயிரம் போனஸ் வாங்கிட்டாங்க. பட்டாசு கிஃப்ட் பாக்ஸ்.. ஸ்வீட் பாக்ஸ்ன்னு இதுவேற. தனியார் ஸ்கூல்ல அதுக்கும் மேல. இதுல கொடுமை என்னன்னா.. சி.இ.ஓ.ஆபீஸுக்கு கொடுக்கணும்.. டி.இ.ஓ. ஆபிசுக்கு கொடுக்கணும்னு சொல்லி கேட்டதுனால..  ஆசிரியர்கள் எல்லாரும் தலைக்கு 100 ரூபாய் கொடுத்திருக்கோம். இப்படி வாங்கின லட்சக்கணக்கான பணம் இவங்களுக்கு மட்டும் இல்லியாம். நோட்டுல எழுதியிருக்கிற வசூலில் பெரும்பங்கை அதிகாரிகள் மட்டத்திலும் பிரித்துக் கொடுத்திருவாங்களாம்.” என்று சொல்ல.. ‘பொத்தாம் பொதுவாகச் சொன்னால் எப்படி? ஒ.ஏ., டிரைவருக்கெல்லாம் பெயர் இல்லியா?’ என்று நாம் கேட்க, “சிவகாசி டி.இ.ஓ.டிரைவர் ஜெகத்ரட்சகன்.. ஒ.ஏ. முருகேன்..” என்று குறிப்பிட்டுச் சொன்னார்கள்.  

 

virudhunagar maavatta kalvi aluvalagangal


 

நாம் ஒ.ஏ.முருகேசனிடம் பேசினோம். “அதுவந்து சார்.. நாங்க போனோம். ஒரு சில ஸ்கூல்ல கொடுத்தாங்க. ரெண்டு மூணு ஸ்கூல்ல இல்லைன்னு சொல்லிட்டாங்க. அதான்.. திரும்பி வந்துட்டோம். இதெல்லாம் தப்பா சார்?” என்று அவர் கேட்டபோது,  ’அஞ்சு பைசா திருடினா தப்பா? அஞ்சு கோடி பேரு அஞ்சுகோடி தடவை அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா?’ என்று  சினிமாவில் அந்நியன் பேசிய வசனம்தான் நம் நினைவுக்கு வந்தது.
 

“விருதுநகர் மாவட்டத்தை அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், சிவகாசி என நான்கு கல்வி மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர். சிவகாசியிலும் அருப்புக்கோட்டையிலும் ஓ.ஏ.க்கள், ஸ்ரீவில்லிபுத்தூரிலும் விருதுநகரிலும் டி.இ.ஓ. டிரைவர்கள் நோட்டு போட்டு போனஸ் வசூலித்தனர். விருதுநகர் மாவட்டத்தைப் போலவே தமிழகம் முழுவதும் தீபாவளி வசூல் வேட்டை நடந்திருக்கிறது.” என்று ஆசிரியர்கள் தரப்பிலிருந்து புகார் வாசித்தனர். 

 

sengottaiyan


 

நாம் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினியை தொடர்ந்து தொடர்புகொண்டோம். ஏனா அவர் நம் லைனுக்கே வரவில்லை. சிவகாசி கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். “கல்வித்துறையில் இருந்துகொண்டு தீபாவளி போனஸ் கலெக்ஷன் பண்ணுனது கண்டிக்கத்தக்கது. இதெல்லாம் கூடவே கூடாது.  இதுல அதிகாரிகளுக்கு பங்கு என்று சொல்வதெல்லாம் பொய். விசாரித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறேன்.” என்றார். 
 

தீபாவளி முடியும்வரையிலும் காத்திருந்து,  கல்வித்துறையினர் வற்புறுத்தி போனஸ் வாங்கிய புகார் வெடியைப் பற்ற வைத்திருக்கின்றனர். ‘இது வெடிக்குமா? வெடிக்காதா?’ என்பது பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அத்துறையின் உயர் அதிகாரிகளின் கையில்தான் இருக்கிறது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

Bonus notification for sugar factory workers

 

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி || ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 11.67% என மொத்தம் 20% போனஸ் வழங்கவும், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

 

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில்  பணிபுரியும் சுமார் 6103 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு  2022-2023  ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ரூ.415.30 லட்சங்கள் செலவினம் ஏற்படும்” என தெரிவிக்கபட்டுள்ளது. 

 

 

Next Story

நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Bonus notification for Consumer Goods Corporation employees

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் 8.33% மற்றும் கருணைத் தொகை 11.67% ஆக 20% 2023-224-இல் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். போனஸ் சட்டத்தின் கீழ்வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் 20% சதவீதம் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இது தவிர தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000/- கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

 

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்கள், நவீன அரிசி ஆலைகள், கிடங்குகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 49 ஆயிரத்து 23 பணியாளர்களுக்கு ரூ.29/- கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க ஆணையிடப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.