Skip to main content

பாஜக பிரமுகரின் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை; வெளியான பகீர் ஆடியோ

Published on 14/12/2022 | Edited on 14/12/2022

 

bjp member college girl student with teacher phone call audio goes viral

 

நாகையில் பாஜக மாவட்ட தலைவருக்குச் சொந்தமான நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. "மாதவிடாய் வலியோடு எப்படி வருவது சார்" என அழுதுகொண்டு பேசும் மாணவியை ஆசைக்கு இணங்க  அழைக்கும் ஆசிரியரின் செல்போன் உரையாடல் வெளியாகி அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாகை அடுத்துள்ள புத்தூர் பகுதியில் பாஜக நாகை மாவட்ட தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமான தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பாஜக மாவட்ட தலைவரின் மனைவி திருமலர் ராணிதான் கல்லூரியின் செயலராக உள்ளார். கார்த்திகேயனுக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அக்கல்லூரியில் உடற்கூறியல் ஆசிரியராகப் பணிபுரியும் நாகை வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதிஷ் என்பவர், மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் அந்தக் கல்லூரியில் பயிலும் நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆசிரியர் தனது ஆசைக்கு அடிபணியுமாறு பேசும் செல்போன் உரையாடல் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருபாலர் பயிலும் நர்சிங் கல்லூரியில் மாணவர்களும், மாணவிகளும் பேசிக்கொள்ளக்கூடாது என்கிற விதி உள்ள நிலையில், ஆண்களிடம் பேசும் மாணவிகளை ஆசிரியர் சதிஷ் தனியாக அழைத்து கண்டித்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

bjp member college girl student with teacher phone call audio goes viral
ஆசிரியர் சதிஷ் - பாஜக பிரமுகர் கார்த்திகேயன்

 

அதன்படி ஆசிரியர் சதிஷ் மாணவி ஒருவரை தனது வீட்டிற்கு கண்டிக்க அழைப்பது, அதற்கு அந்தப் பெண் நான் கல்லூரிக்கு வருகிறேன் சார் என்று கூறியும் அதற்கு அந்த ஆசிரியர் வீட்டிற்கு அழைத்து கட்டாயப்படுத்துவதுமான ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் தனக்கு மாதவிடாய் வலி இருப்பதாகச் சொல்லி அந்தப் பெண் சமாளிக்கவே, அதையும் புரிந்து கொள்ளாத அந்த காமவெறி கொண்ட ஆசிரியர் பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் வா என்று தனது வீட்டிற்கு அழைக்கும் ஆடியோவும் வெளியாகி உள்ளது.

 

இந்த நிலையில் பாஜக நாகை மாவட்ட தலைவர் தன்னுடைய கல்லூரி மாணவிகளிடம் சமரசத்தில் ஈடுபடும் காட்சிகளும் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி தமிமுன்சா தலைமையிலான அதிகாரிகள் கல்லூரியில் நேரில் விசாரணை மேற்கொண்டனர். கல்லூரி மாணவிகளிடம் தனித்தனியே வாக்குமூலம் எழுதி வாங்கிய அதிகாரிகள் கல்லூரி தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 

 

நாகையில் பாஜக மாவட்ட தலைவருக்குச் சொந்தமான நர்சிங் கல்லூரி மாணவிக்கு அதே கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுக்கும் ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்