நெல்லையிலிருந்து சென்னை புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் சாம்பாரில் வண்டு கிடந்ததாக பயணி ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தனக்கு வழங்கப்பட்ட உணவில் இடப்பெற்றிருந்த சாம்பாரில் வண்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணி ஒருவர் அதை தன்னுடைய செல்போனில் புகைப்படம் எடுத்து ஆதாரத்துடன் அங்கு இருந்து ஊழியர்களிடம் தெரிவித்தார். ஊழியர்கள் மறுப்பு தெரிவிக்க முயன்ற போதிலும் பாதிக்கப்பட்ட பயணி 'என் கையில்இருப்பது வண்டு என்பது தெளிவாக தெரிகிறது. பாருங்க சார்' என தெரிவித்தார். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் இது தாளிப்பு வடகம் என ஏதேதோ மழுப்பல் விளக்கங்களை அளிக்க முயன்றனர். இருப்பினும் ஆதாரத்துடன் 'வண்டு என்று அழகாக தெரிகிறது' என பயணி தெரிவித்தார். தற்பொழுது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.