Skip to main content

திடீரென சாலையில் மயங்கி விழுந்த முதியவர்... முதலுதவி செய்த எஸ்.பி!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

tiruppattur district old man sp police


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை சாலை அருகே உள்ள வாணியம்பாடி சட்டமன்ற அலுவலகம் அருகில் ஏப்ரல் 30- ஆம் தேதி மதிய நேரம் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனைப் பார்த்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் ஓடிவந்து அவரை தூக்கி தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்தார். அந்தச் சாலையில் சென்ற வெகு சிலரும் ஓடிவந்து அந்த பெரியவரைத் தூக்கிச் சென்று பூட்டப்பட்ட ஒரு கடையின் வாசலில் படுக்க வைத்தனர்.  
 

tiruppattur district old man sp police


அப்போது வாணியம்பாடியில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகளைப் பார்வையிடுவதற்காக காரில் வந்துக்கொண்டு இருந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், தனது வாகனத்தை நிறுத்தி என்னவென விசாரித்தார். விவரம் சொல்லப்பட்டதும், காரில் இருந்து இறங்கி அங்குச் சென்று அவசர முதலுதவியாக அவரது கை மற்றும் நெஞ்சில் கைவைத்து நாடிப்பார்த்தார். அவரை நன்றாகச் சுவாசிக்க வைக்க முயன்றார். உடனடியாக அவசர மருத்துவ ஊர்திக்கு தகவல் தர அவை வந்ததும், அவரை அந்த வாகனத்தில் ஏற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மயங்கிக் கிடந்தவருக்கு உதவி செய்கிறார்களே, நாம் ஏன் இறங்கி சென்று உதவ வேண்டும் என ஐ.பி.எஸ் அதிகாரி எண்ணாமல் கீழே இறங்கி முதலுதவி செய்தது பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. விஜயகுமார் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தாலும், அவர் எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர் என்பது குறிப்பிடதக்கது.

 

சார்ந்த செய்திகள்