Skip to main content

"வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேணும்"... நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

தர்ஷிகா என்ற பெண்ணை அவளது கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் கனடா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி விசாரித்த போது, இலங்கைவாழ் தமிழ் பெண் தர்ஷிகா. இவருக்கு 27வயதாகிறது. இலங்கையில் இருந்த போது தனபாலசிங்கம் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர இரண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். இலங்கை தமிழ் பெண்ணான தர்ஷிகாவுக்கு 2 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள் உள்ளனர். திருமணம் முடிந்தவுடன் வேலை காரணமாக கனடாவிற்கு சென்றுவிட்டார். இதனால் தர்ஷிகா இலங்கையிலேயே தனது பெற்றோருடன் இருந்துள்ளார். பின்னர் கணவருடன் சேர்ந்து இருப்பதற்காக தர்ஷிகாவும் கனடா நாட்டிற்கு சென்றுள்ளார். 

 

incident



பின்பு கணவனுடன் கனடா நாட்டில் வாழ்ந்து வந்த தர்ஷிகா வீட்டில் தனியாக அதிக நேரம் இருப்பதால் வேலைக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். மேலும் தன்னுடைய குடும்பம் வசதி இல்லாத காரணத்தினால் வேலைக்கு சென்றால் குடும்பத்திற்கு உதவ முடியும் என்று நினைத்து பார்த்து வேலைக்கு செல்ல கணவனிடம் கேட்டுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இரண்டு உறவினர்களும் கணவன், மனைவி சண்டையை தீர்த்து வைத்துள்ளனர். அப்படி இருந்தும் மீண்டும் தர்ஷிகாவும், தனபாலசிங்கமும் சண்டை போட்டுள்ளனர். இதனால் கணவன், மனைவி தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். பிறகு அடிக்கடி தர்ஷிகாவை சந்தித்து தனபாலசிங்கம் தொந்தரவு செய்ததாக சொல்லப்படுகிறது. 

இதனால் தர்ஷிகா நீதிமன்றத்துக்கு சென்று வழக்குப்போட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தர்ஷிகாவை, அவரது கணவர் சந்திக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் பின்பு நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தர்ஷிகாவை சந்தித்துள்ளார் தனபாலசிங்கம். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாக ஏற்பட தர்ஷிகாவை கத்தியை எடுத்து துரத்தி சென்று குத்தியுள்ளார். மனைவியை துரத்தி குத்திய சம்பவம் அங்கு இருந்த பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொலை செய்த பின்னர் காவல் நிலையத்தில் தனபாலசிங்கம் சரணடைந்தார். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கானது கனடா போலீஸாரால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இது பற்றி செய்தியாளர்களிடம் தர்ஷிகாவின் பெற்றோர் கூறும் போது, "எங்கள் மகளை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும். எங்கள் வீட்டில் விளக்கு அணைந்துவிட்டது. எங்கள் மகளை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை கடுமையாக தண்டிக்க வேண்டும். எங்கள் அழுகுரல் கனடா நாட்டிலுள்ள நீதித்துறையினருக்கு கேட்க வேண்டும்" என்று கதறி அழுதனர். மேலும் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார் பெண்ணை நன்றாக பார்ப்பார் என்று அவர்கள் காதலுக்கு சம்மதித்தோம், தற்போது என் பெண் இல்லையே என்று கதறி அழுத சம்பவம் அனைவரையும் வேதனை அடைய வைத்துள்ளது. 

சார்ந்த செய்திகள்