Skip to main content

5 அப்பாவி தமிழர்கள் படுகொலைக்கு கண்டனம் - ஆந்திர பேருந்துகளை சிறைப்பிடிக்கும் போராட்டம்

Published on 19/02/2018 | Edited on 19/02/2018
bus

கூலி வேலைக்கு சென்ற 5 அப்பாவி தமிழர்களை ஆந்திராவில் செம்மரங்களை வெட்ட வந்ததாக பொய்யான குற்றசாட்டை கூறி படுகொலை செய்துள்ள ஆந்திர அரசையும், காவல்துறையையும் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்  சார்பாக 19.02.2018 இன்று மாலை 4.00 மணிக்கு சென்னை,  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆந்திர பேருந்துகளை சிறைப்பிடிக்கும் போராட்டம் நடைபெற்றது.

 

18.02.2018 நேற்று ஆந்திராவிற்கு கூலி வேலைக்கு சென்ற 5 அப்பாவி தமிழர்களை ஆந்திர போலீசார் மற்றும் வனத்துறையினர் அடித்து  கொன்று ஏரியில் வீசியிருக்கிறார்கள்.

 

ஆந்திரப் போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட அத்தனை சம்பவங்களுக்கும் முறையான சி.பி.ஐ விசாரணை வேண்டும்;மேலும் இந்த 5 தமிழர்களின்  உடலை பிரேத பரிசோதனை செய்ய டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழு பரிசோதனை செய்ய வேண்டும்; இந்த வழக்கு  விசாரணையை  ஆந்திரா, தமிழ்நாடு இல்லாமல் வேறொரு மாநிலத்தில் நீதி மன்றம் அமைத்து விசாரணை  நடத்தப்பட வேண்டும்.

 

 சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதுடன் அவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்  தலைமயில் 19.02.2018 இன்று மாலை 4.00 மணிக்கு சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆந்திர பேருந்துகளை சிறைப்பிடிக்கும் போராட்டம் நடைபெற்றது.
 

சார்ந்த செய்திகள்