Skip to main content

பெண்களை குறிவைக்கும் ஆட்டோ ஓட்டும் பெண்... சென்னையில் பதற வைத்த சம்பவம்!

Published on 28/08/2019 | Edited on 28/08/2019

பெண்களை குறிவைத்து திருடி வந்த பெண்ணை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சர்மிளா இவர் மாலை நேரத்தில் வழக்கம் போல் காய்கறி வாங்க மார்க்கெட்டிற்கு தனியே சென்றுள்ளார். காய்கறி வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பும் போது அவரை ஒரு ஆட்டோ பின் தொடர்ந்து வந்துள்ளது. பின்னல் ஆட்டோ வருவதை பார்த்த சர்மிளா சற்று ஓரமாக சென்றுள்ளார். அப்போது திடிரென்று ஆட்டோவில் இருந்து ஒரு பெண் அவருடைய கைப்பையை பறித்து கொள்ள ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. 
 

auto driver

தனது கைப்பை திருடு போனதை உணர்ந்த சர்மிளா உடனே கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு கூப்பிட அங்கிருந்தவர்கள் உடனே திரண்டு ஆட்டோவை மடக்கி பிடித்தனர். ஆட்டோவை பிடித்த உடன் ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். பின்பு ஆட்டோவில் இருந்த பெண்ணை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழிப்பறி செய்த பெண்ணிடமிருந்து சர்மிளாவின் கைப்பையை சர்மிளாவிடம் ஒப்படைத்தனர். அதன் பின்பு அந்த பெண்ணிடம் விசாரித்த காவல்துறையினர் விசாரித்த போது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   திருடிய  பெண் ஆந்திராவைச் சேர்ந்தவர். அவரது பெயர் அர்ச்சனா என்பது தெரியவந்தது. அவர் புளியந்தோப்பில் உள்ள வாடகை வீட்டில் குடியிருந்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  

இந்நிலையில் இது குறித்து அர்ச்சனாவிடம் மேலும் விசாரணை நடத்திய போது, ஆட்டோ ஓட்டுநர்களிடம் இனிமையாக பேசி அவர்களை வழிப்பறியில் ஈடுபடுத்தி அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுத்து வருவதாக போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்நிலையில் அவரை கைது செய்த போலீசார் ஆட்டோ ஓட்டுநரை தீவிரமாக தேடிவந்தனர். அந்த ஆட்டோ ஓட்டுநர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்று கண்டு பிடித்தனர். பின்பு பிரபு என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இருவர் மீதும் கொள்ளை குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்