Skip to main content

அரியலூர் வெடி விபத்து சம்பவம்; உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

Ariyalur blast incident; The casualty toll rises to 7

 

சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசுக் கடைகளில் ஏற்படும் திடீர் விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள் வாடிக்கையாகி வருகிறது. நேற்று முன்தினம் தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில், பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு, 14 பேர் உயிரிழந்தது பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில், அரியலூரில் நாட்டுப் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் பலர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் என்ற பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் இன்று திடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் முன்னதாக ஆலையில் பணியாற்றிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்பொழுது மேலும் 3 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்