Skip to main content

‘திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பம்’ - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
Application for talen Test Directorate of Government Examinations 

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு ஜூலை மாதம் நடக்க இருப்பதை அடுத்து, பள்ளி மாணவர்கள் ஜூன் 11 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2024 - 2025 ஆல் கல்லியாண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 21.07.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று தற்போது 2024 - 2025 ஆம் ஆண்டில் பதிணென்றாம் வகுப்பினை அரசுப் பள்ளிகளில் பயிலும் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். 

Application for talen Test Directorate of Government Examinations 

தேர்வில் 1000 மானாக்கர்கள் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவர்கள் + 500 மாணவியர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூபாய் 10 ஆயிரம் (மாதம் ரூ.1000/ வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும்) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு இருதாள்களாக நடத்தப்பெறும் முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும்.

இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும். முதல் தாள் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் இரண்டாம் தாள் பிற்பகல் 02.00 மணி முதல் 04.00 வரையிலும் நடைபெறும். www.dge.in.gov.in இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை 11.06.2024 முதல் 26.06.2024 பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேர்வு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்) சேர்த்து 26.06.2024ற்குள் மாணவர் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்