Published on 23/09/2020 | Edited on 23/09/2020

சென்னையில் தனியார் செய்தித்தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் வெற்றிவேல், "சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்ததும் அ.தி.மு.க.வை மீட்பதற்கானப் பணிகளைத் தொடங்குவார். தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி வைப்பது குறித்து சசிகலா, தினகரன் முடிவெடுப்பார்கள். தினகரன் டெல்லி சென்று யாரை சந்தித்தார் என்பது குறித்து எனக்கு தெரியாது" இவ்வாறு அவர் கூறினார்.