Skip to main content

அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி; ஆர்வத்துடன் கலந்து கொண்ட வீரர்கள் 

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

all india level volleyball match stated karur

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் ஆண்களுக்கான 63 ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் பெண்களுக்கான 9 ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் இன்று துவங்கி ஆறு நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஆண்கள் பிரிவில் எட்டு அணிகளும், பெண்கள் பிரிவில் ஐந்து அணிகளும் கலந்து கொண்டு விளையாட உள்ளார்கள்.

 

இந்தியன் கடற்படை அணி, லோனா வில்லா திருவனந்தபுரம் கேரள மின்சார வாரிய அணி, புதுடெல்லி இந்தியன் ரயில்வே அணி, பஞ்சாப் போலீஸ் அணி மற்றும் புதுடெல்லி இந்திய விமானப்படை அணி உள்ளிட்ட தலைசிறந்த எட்டு அணிகளும், பெண்கள் பிரிவில் ஐந்து அணிகளும் கலந்து கொள்கின்றனர். ஆண்களுக்கான இந்தப் போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும். பெண்களுக்கான போட்டி லீக் முறையில் நடைபெறும். இப்போட்டி வருகிற 27 ஆம் தேதி நடைபெறும்.

 

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசு ஒரு லட்ச ரூபாயும் சுழல் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான போட்டியில் திருவனந்தபுரம் கேரளா மின்வாரிய அணியும், புதுடெல்லி ரயில்வே அணியும் மோதியதில் 78க்கு 65 என்று புள்ளி கணக்கில் திருவனந்தபுரம் கேரளா மின்வாரிய அணி வெற்றி பெற்றது. பெண்களுக்கான போட்டியில் நார்த் அண்ட் ரயில்வே அணியும் கேரளா போலீஸ் அணியும் மோதியதில் 71க்கு 50 என்ற புள்ளி கணக்கில் நார்த்தன் ரயில்வே அணி வெற்றி பெற்றது. மேலும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் பரிசுகளும் கோப்பைகளும் வழங்க உள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்