Skip to main content

ஜாமீன் கோரி அலிகான் துக்ளக் மனு தாக்கல்

Published on 23/12/2024 | Edited on 23/12/2024
Alikhan Tughlaq filed a bail petition

சென்னை முகப்பேர் பகுதியில் மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக சமீபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் உட்பட 10 நபர்களை கடந்த 4/12/2024 அன்று ஜெ.ஜெ.நகர் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா எடுத்து வந்து இங்குள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் செயலி மூலம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

மேலும் அவர்களின் செல்போனில் பதிவான எண்களை கொண்டு கஞ்சா விற்பனையில் யார் யார் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் (26) செல்போன் நம்பரும் அதில் இருந்ததையடுத்து அவரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை செய்தனர். அவரோடு அந்த செல்போனில் இருந்த எண்ணின் அடிப்படையில் இன்னும் 3 பேரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இறுதியில் அவர்கள் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

இதனால் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். சிறையில் உள்ள அலிகான் துக்ளக் ஜாமீன் கோரி சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் மீண்டும் சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் அலிகான் துக்ளக் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த ஜாமீன் மனுவை நாளை நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

சார்ந்த செய்திகள்