![aleida guevara welcome ceremony at chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/yhO9LHgqFmmmEazFl6RPG3YrL0Ls0dktLcAoiTeGcCc/1674111337/sites/default/files/2023-01/che-1.jpg)
![aleida guevara welcome ceremony at chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/Y9-vswWOxqbLT-QwT4QgoI1Zbn_eDPYn1btIPaiwHso/1674111337/sites/default/files/2023-01/che-2.jpg)
![aleida guevara welcome ceremony at chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/C5ge7QBxytIxsiuwvG88gTUI7-b4WA7dyxngnuzzPU0/1674111337/sites/default/files/2023-01/che-3.jpg)
![aleida guevara welcome ceremony at chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/g-0k32AgLpQsiALrBNvE---XqN1ThzK_etcPyQ41uuU/1674111337/sites/default/files/2023-01/che-4.jpg)
![aleida guevara welcome ceremony at chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/84UIwuX-dcoWwK7pjLsgdATMawkvDfEXOYHmqxsKTcE/1674111337/sites/default/files/2023-01/che-5.jpg)
![aleida guevara welcome ceremony at chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/L0r2712ACi0XLVYyEngjQFvR3zYYQnZ8RM7hkZmvC2c/1674111337/sites/default/files/2023-01/che-7.jpg)
![aleida guevara welcome ceremony at chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/52TmoiDtu_SuqrT4ULUgkghpW1M67DMuER9qtXsjxHg/1674111337/sites/default/files/2023-01/che-8.jpg)
Published on 19/01/2023 | Edited on 19/01/2023
புரட்சியாளர் சேகுவேரா மகள் அலைடா குவேரா மற்றும் அவரது மகள் பேரா. எஸ்டெஃபானி குவேரா ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். இவர்களுக்கு நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியானது சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி, மதிமுக சார்பில் வந்தியத்தேவன், காங்கிரஸ் கட்சி சார்பில் கோபண்ணா, விசிக சார்பில் தொல்.திருமாவளவன் எம்.பி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.