Published on 23/04/2018 | Edited on 23/04/2018

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ’நமது புரட்சித் தலைவி அம்மா’நாளிதழில் அதிமுக - பாஜக இடையிலான பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது என்று கட்டுரை வெளிவந்தது. அதிமுகவும் பாஜகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசியல் வட்டாரத்தில் இந்த கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த கட்டுரை விவகாரத்தில் கட்டுரையாளர் திருமலை, நாளிதழ் உதவி ஆசிரியர் பன்னீர்செல்வம் ஆகியோர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.