காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட சுமார் 1000 ஏக்கர் பாசனம் பெரும் ஒழலூர் ஏரியில் அரைகுறையாக அமைக்கப்படுள்ள மதகு பணிகளால் விவசாயம் முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட ஒழலூர் ஏரியின் நிர் மூலம் புதுபாக்கம், ஒழலூர், ஒத்திவாக்கம், மணப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலம் பசானம் பெற்று வருகிறது. இந்நிலையில் ஏரியின் மதகுகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில் மதகுகளில் மேல் மண் அணைக்கும் பணி நடைபெறும் நிலையில். தற்போது பெய்து வரும் மழையால் ஏரியின் நீர் பிடிப்பு அளவு வேகமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலை தொடர்ந்தால் ஏரியிலிருந்து தண்ணீர் முழுவதும் வெளியேரி வீணாகிவிடும் சூழ்நிலை நிலவுகிறது. மேலும் பாசன வசதி பெரும் விவசாய நிலங்களும் முற்றிலும் பாதிக்கப்படும் எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கட்டப்பட்டுள்ள மதகுகளுக்கு மண் அணைத்து ஏரி கரையை பலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.