![Agriculture Minister who provided welfare assistance worth Rs.5 crore to Kattumannarkovil](http://image.nakkheeran.in/cdn/farfuture/6JlK0t8ECV4mbXfe6_-IO3yR-5ACXYcdAEL2QCnrPvc/1685452091/sites/default/files/inline-images/1002_40.jpg)
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே திருநாரையூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 1027 பயனாளிகளுக்கு 5 கோடியே 12 லட்சத்து 24 ஆயிரத்து 743 ரூபாய் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, பிரதான் மந்திரி வீடு வழங்கும் திட்டம், வேளாண் உபகரணங்கள், இடுபொருட்கள், விதைகள், விவசாயிகள் பயிர்க்கடன், கர்ப்பிணி பெண்களுக்காக ஊட்டச்சத்து பெட்டகம், கண் கண்ணாடி, தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, சுய உதவிக் குழுவினர்களுக்கு சூழல் நிதி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மனு பெட்டிகள் மூலம் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், சிதம்பரம் உதவி ஆட்சியர் சுமேதா சுமன், வட்டாட்சியர் தமிழ்செல்வன், ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட வருவாய்த் துறையினர், காவல்துறையினர், பொதுமக்கள் எனத் திரளாகக் கலந்து கொண்டனர்.