Skip to main content

’வெளியூர் வேட்பாளர்களை கட்சிக்காரங்க ஏற்கல..’- உண்மையை உடைத்த அமைச்சர்

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

 


அதிமுக, திமுக கூட்டணிகளில் சொந்த தொகுதி வேட்பாளர்களை நிறுத்துவதைவிட தொகுதி மாற்றி நிறுத்தப்பட்டுள்ளது அனைத்துக் கட்சியிலும் உள்ளது. ஆனால் தொகுதியை இழந்த புதுக்கோட்டை மக்களுக்கு ஆறுதலாக திருச்சி தொகுதியில் மட்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் திருநாவுக்கரசரும் அமமுக சாருபாலா தொண்டைமானும் நிறுத்தப்பட்டுள்ளனர்.  மற்ற தொகுதிகளில் மற்ற மாவட்ட வேட்பாளர்களே போட்டி யாளர்களாக உள்ளனர்.


  

ba

 

இந்த நிலையில் தான் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக கூட்டணியில் சேலத்திலிருந்து தேமுதிக வேட்பாளராக டாக்டர் இளங்கோவனை தேர்வு செய்து அழைத்து வந்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். முதல் நாள் வேட்பாளர் அறிமுக கூட்டத்திலேயே நான் அமைச்சர் போல ஏமாளி என்று சொன்னார் இளங்கோவன்.  இந்த நிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினார்கள்.

 

 அந்த கூட்டத்தில் பேசிய வேட்பாளர் இளங்கோவன்,  வேட்புமனு என்னது.. ஆனா வேட்பாளர் நான் இல்ல என்றார். காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை செயlல்படுத்துவேன் இல்லன்னா ராஜினாமா செய்வேன் என்றெல்லாம் பேசினார். 


அதே கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,    ஈழத்தமிழர் பிரச்சனைக்கு காங்கிரஸ் திமுக தான் காரணம். காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றவர்,  எல்லாரும் கேமராவை ஆஃப் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு திமுக, காங்கிரஸ் கூட்டணி தலைவர்களையும் வேட்பாளர்களையும் குற்றம் சொல்லியே பேசி முடித்தவர் வெளியே வரும் போது மீடியா நண்பர்களை அழைத்து.. வீடியோ எடுக்காதீங்கன்னு சொன்னதுக்கு தப்பா எடுத்துக்காதீங்க.. வெளியூர் வேட்பாளர்களை நம்ம மக்கள் ஏற்கல.. கொஞ்சம் மந்தமா இருக்காங்க.  அதனால அவங்களை உற்சாகப்படுத்த தான் அப்படி பேசினேன் என்றார்.


  இதை கேட்டுக் கொண்டிருந்த ர. ர. க்கள் சிலர்.. மாவட்டத்துல இருக்கிற அதிமுக நிர்வாகிகளையே கூட்டத்துல காணும் அழைப்பு இல்ல.. அப்பறம் எப்படி உற்சாகமா வேலை செய்வாங்க. வீடியோ வெளியானா அமைச்சர் பேச்சுக்கு எதிர் பேச்சா அவரோட வழக்குகள் பற்றி எல்லாம் பேசுவாங்களே அதனால தான் எதிர் கட்சியினரை வசை பாடியதை வெளியே விடவேண்டாம்னு சொல்றார்.  எப்படி எங்க அமைச்சரின் தந்திரம் என்று சிரித்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.