தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஃபெஞ்சல் புயலாக நிலவிக் கொண்டிருந்தது. இந்த புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி கடற்கரையை கடந்து தற்போது பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலையிலிருந்து ஃபெஞ்சல் புயலால் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே உள்ள சென்னை பெங்களூர் சாலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 13 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் ஆர் காந்தி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மேம்பால பணிகள் தொடர்ந்து ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும் தற்போது பெய்து வரும் கனமழையால் சாலையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியும் சாலையில் குண்டு குழியுமாக காணப்பட்டதால் அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக பள்ளத்தில் சிக்கிக்கொண்டிருந்தது. இதனை அறிந்த மாநில தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜேசிபி இயந்திரம் மூலமாக சாலையில் தேங்கிக் கொண்டிருந்த தண்ணீரை முற்றிலுமாக அகற்றி அரசு பள்ளத்தில் சிக்கித் தவித்த பேருந்தை வெளியே எடுத்து போக்குவரத்தை சரி செய்தனர்.