![Admission in H. raja Apollo](http://image.nakkheeran.in/cdn/farfuture/g_2lopkFSz1O4zKHyRsCnWsRuq5w5yZ2Eh2_e7opWBQ/1697077250/sites/default/files/inline-images/a1831.jpg)
பாஜகவில் அவ்வப்போது சர்ச்சையாக பேசி சிக்கிக் கொள்பவர் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா. அண்மையில் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசியதாக எச்.ராஜா மீது கொடுக்கப்பட்ட புகார்கள் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதற்கு முன்பே நீதிமன்றத்தை அவமதிப்பு செய்தது பேசியது தொடர்பான புகார்கள் எழுந்தது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து அவருடைய ட்விட்டர் தளத்தில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சில தினங்களுக்கு அன்றாடப் பணிகளில் ஈடுபட இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் திரு.H. ராஜா அவர்கள் https://t.co/rFgmE6zLQc.,B.L.,FCA.,Ex.MLA., உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சில தினங்களுக்கு அன்றாட பணிகளில் ஈடுபட இயலாது என தெரிவித்துக்கொள்கிறோம்.
— H Raja (@HRajaBJP) October 11, 2023
- Team HR