Skip to main content

விஜய் ரசிகர் மன்ற இளைஞர் அணி தலைவர் டி.டி.வி தீடீர் சந்திப்பு!!

Published on 10/10/2018 | Edited on 10/10/2018

சர்கார் திரைப்பட விழாவில் நடிகர் விஜய் எல்லோரும் தேர்தலில் நின்று விட்டு சர்கார் அமைப்பார்கள். நாம் சர்கார் அமைத்து விட்டுத் தேர்தலில் நிற்கப்போகிறோம். புழுக்கத்துக்குப் பின் மழை வருவது போல, நெருக்கடி நெருங்கும்போது அடிபட்டு நல்லவர்கள் முன்னே வருவார்கள் அதுதான் இயற்கை. அப்படி வரும் ஒருவருக்குக் கீழே ஒரு சர்கார் வரும். நான் முதல்வரானால் நிஜத்தில் நடிக்கமாட்டேன்” என்று அரசியல் வசனங்கள் பேசி அரசியல்கட்சிகளுக்கு பெரிய ஷாக் கொடுத்தார். நடிகர் விஜயின் அரசியல் அதிரடி பேச்சு அரசியல் கட்சியினர் இடையேயும், பொதுமன்றங்களிலும், டிவி விவாதங்களிலும் பரபரப்பாக பேசும் பொருளாக மாற்றியது. ஒரு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியையே தமிழக முழுவதும் பரபரப்பாக பேச வைத்தார். நடிகர் விஜய். 

 

VIJAY

 

இப்படி நாளுக்கு நாள் விஜய் கிராப் ரேட் ஏறிக்கொண்டிருந்த நிலையில் சென்னையில் தி.மு.க. மேடையில் பேச்சாளர் வே.மதிமாறன். தளபதி என்றால் என்று எங்கள் தலைவர் ஸ்டாலின், எம்.எல்.ஏ. ஆனா பிறகு தான் முதலமைச்சர் என்கிற அடிப்படை அறிவு இல்லாதவர் கூட தளபதியா என்று ஸ்டாலின் முன்னிலையிலே நடிகர் விஜயை பேசி தள்ளிய பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சியில் டி.டி.வி தினகரனை திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் திருச்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் குடமுருட்டி கரிகாலன் சந்தித்து சால்வை அணிவித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

Actor Vijay's trusted youth team leader TTV  Meets

 

திருச்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் குடமுருட்டி கரிகாலன். இவர் திருச்சி மாவட்ட தி.மு.க. துணை செயலார் குடமுருட்டி சேகரின் தம்பி.  குடமுருட்டி சேகர் தி.முக. ஆட்சியில் தன் தம்பி விஜய் மன்றத்தில் இருந்தாலும் அப்போதைய அமைச்சர் கே.என்.நேருவின் உதவியுடன் இந்து அறநிலை துறையில் அரசாங்க வேலையை வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது. 

 

ஆரம்ப காலம் முதல் விஜய் ரசிகர் மன்றத்தில் பொறுப்பில் இருந்து ஏகப்பட்ட பொருட் செலவு செய்து விஜய் திரைப்படங்களுக்கு திருச்சியில் செலவு செய்து கொண்டாடியவர், 15 ஜோடிகளுக்கு திருச்சியில் நடிகர் விஜய் தலைமையில் இலவச திருமணம் செய்து நடிகர் விஜயின் நம்பிக்கை பெற்றவர். இப்படி விஜய் சமீபத்தில் சர்கார் திரைப்பட ஆடியோ ரீலிஸ்க்கு கூட திருச்சியில் வேனிலும், பஸ்ஸிலும் ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்றவர். 

 

 TTV

 

இதை விட முக்கியமாக ஜெ. ஆட்சியில் இருக்கும் போது கூட்டணி பேச்சு வார்த்தை வரும் போது நிர்வாகிகளை சந்தித்து தேர்தலில் நிற்க யாருக்கு விருப்பம் என்று கேட்ட போது முதல் ஆளா எழுந்து நின்று நான் நிற்கிறேன். எவ்வளவு செலவானலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி நடிகர் விஜய்க்கு  நம்பிக்கை கொடுத்து அதிர்ச்சியடைய வைத்தவர். இப்படி விஜயின் அரசியல் நடவடிக்கைகளுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்த குடமுருட்டி கரிகாலன் நேற்று கரூர் உண்ணாவிரத்திற்கு கலந்து கொண்டு திருச்சி விமானநிலையத்திற்கு வந்த டி.டி.வி தினகரனை விமானநிலையத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் குடமுருட்டி கரிகலான் சால்வை அணிவித்தார் என்பதுதான் தற்போது திருச்சியில் பரபரப்பு அரசியல் சூட்டை கிளப்பியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“எம்.ஜி.ஆர் போல் விஜய்யும் மக்களுக்கு உதவி செய்ய நினைக்கிறார்” - செல்லூர் ராஜூ

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Sellur Raju says Like MGR, Vijay also wants to help people

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பா.ஜ.க கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அ.தி.மு.க, தே.மு.தி.கவும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

இதற்கிடையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்தார். இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது, 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் தான் பிரதான இலக்கு என்றும், ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும் தமிழக வெற்றிக் கழகம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (18-06-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், த.வெ.க தலைவர் விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவர் என்று அவர் அறிக்கை வெளியிட்டிருந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இது அவருடைய நோக்கம். தனிப்பட்ட முறையில் ஒரு இளைஞர் (விஜய்) எம்.ஜி.ஆர் போல் தான் சம்பாரித்த பணத்தை மக்களுக்கு கொடுத்து உதவ நினைக்கிறார். அவர் களத்திற்கு வந்த அவருடைய கொள்கை, செயல்பாடு உள்ளிட்டவையெல்லாம் முதலில் சொல்லட்டும். எப்போதுமே அதிமுக யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை வச்சுக்காது. அவர் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் நல்லது தான்” என்று கூறிச் சென்றார். 

Next Story

‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நிலைப்பாடு என்ன?’- த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
T.V.K. leader Vijay's announcement What is the stand on the Vikravandi by-election?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், தே.மு.தி.கவும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே. எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். கழகத் தலைவர், விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.