Skip to main content

“அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்”  - கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் நேரு

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

"Action will be taken to fulfill all demands" - Minister Nehru

 

மே தினத்தினை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் முத்தப்புடையான்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு சிறப்புப் பார்வையாளராகப் பங்கேற்று மக்களிடம் கலந்துரையாடிப் பேசினார். 

 

இந்தக் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற மக்கள், பேருந்து வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, பாலம் அமைத்தல், வேலைவாய்ப்பு, ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் தங்கள் கிராம வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று, அமைச்சர் நேரு, மக்கள் தெரிவிக்கின்ற கருத்துக்களின் அடிப்படையில் கிராமத்தில் வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்படும். மேலும் மக்கள் இக்கூட்டத்தில் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்