
இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தற்போது ஏற்பட்டு வருகிறது. மஹாராஷ்ட்ரா, குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இருப்பினும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
சென்னையில் கடந்த மூன்று நாட்களாகவே தொற்று பாதிப்பு அதிகமாகவே பதிவாகிவந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் தரமணி, பெருங்குடி மற்றும் கந்தன்சாவடி ஆகிய மூன்று கிளைகளில் 40 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் கடைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்களில் கரோனா விதிகளை பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறி அங்காடிகளில் பணியாற்றுபவர்கள், வாடிக்கையாளர்கள் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.