திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட 82 வயதான மூதாட்டி விசாலாட்சி வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு, அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 21 வயது கல்லூரி மாணவி முதல் வயதான முதியவர் வரை பலர் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளிக்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டு 82 வயதான மூதாட்டி விசாலாட்சி வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி அனைவராலும் ஆர்வமாக பேசப்படுகிறது.
இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் துரைராமசாமியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் திமுகவைச் சேர்ந்த சந்திரசேகர், தனது மனைவியை போட்டி வேட்பாளராக களம் இறக்கியிருந்தார். அங்கு போட்டி கடுமையாக இருந்த போதிலும் 300 வாக்குகள் வித்தியாசத்தில் விசாலாட்சி வெற்றி பெற்று ஊராட்சி மன்றத் தலைவராகியுள்ளார்.